எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்றுமதி – இறக்குமதி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது சேவையில் ஈடுபடும் பாரவூர்திகளின் எண்ணிக்கையும் 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
எனினும் உடனடியாக தடையின்றி எரிபொருள் வழங்கப்படுமாயின் விரைவாக சேவைகளை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
திறக்கப்பட்டுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து தொடருந்து திணைக்களத்துக்கான வருவாய் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
தொடருந்து கட்டணம் அதிகரிக்கப்படாததால் இவ்வாறு தொடருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பல நீண்ட நாள் படகுகள் கடலுக்கு செல்லாமல் உள்ளன.
அகில இலங்கை நீண்ட நாள் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





