கிளிநொச்சி – நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை எரிபொருள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த தொகை எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல் மற்றும் 25 லீற்றர் மண்ணெண்ணெய் அடங்கிய 35 பீப்பாய்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 158





