கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சுத்தமான நீர் ஆக்கப்படுகிறது . இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீர் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்தக் குடிநீரை பியர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமொன்று இந்தச் சிறப்பு பியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பியர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது.
இந்த பியர் மிகவும் சுவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பியருக்கு தற்போது மதுப்பிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும். அந்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறு சுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





