கம்புறுபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில், புகைப்படம் எடுக்கச் சென்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரது கைப்பேசியும் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் நபர் விமான நிலையத்தில் பணியாற்றிவரும் ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்புறுப்பிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் உள்ள பிரதேசமொன்றில், கம்புறுப்பிட்டிய கிராமிய வங்கியின் ஊழியர்களுக்கு மட்டும் 10 லீற்றர் எரிபொருள் கலன்களில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற போதே அவர் மீது நேற்று (26) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கம்புறுபிட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நபர் தற்போது கம்புறுபிட்டிய – ஆதபான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் கம்புறுப்பிட்டிய காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





