யூரியா பத்தாயிரம் ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை

இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா, மூட்டையொன்றின் விலையை பத்தாயிரம் ரூபாவிற்கு அடுத்த வாரம் முதல் சகல விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்சமயம் யூரியா மூட்டையொன்றின் விலை 42 ஆயிரம் என்ற அதிக விலையில் சந்தையில் விற்பனையாகிறது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உரத்தை விவசாயப் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இந்த விலையில் யூரியா மூட்டையை விற்பனை செய்யுமாறு விவசாயிகள் கடிதம் மூலம் தமக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் உரிய தரத்தில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என சிலர் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கப் புறம்பானது என அமைச்சர் தெரிவித்தார்.

65 ஆயிரம் மெற்றிக் தொனை ஏற்றி கப்பல் தற்சமயம் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உரத்தை விநியோகிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்