அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா (Chiyo Kanda) தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கியிடம் இருந்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உதவிகளை கோரியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்படவுள்ள பாதீட்டில் பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களின் தீவிரமான தன்மையையும் அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
நிலையான தீர்வுகள் கிடைக்கும் வரை உலக வங்கியின் குறுகிய கால நிதி உதவி பாராட்டத்தக்கதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களுடன் தமது அலுவலகம் இணைந்து செயற்படுவதாக உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை ‘மீண்டும் செயற்படுத்துமாறு’ ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





