உலக சந்தையில் இந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலையானது 1.4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,807 அமெரிக்கா டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்படி, நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தங்கத்தின் விலையில் பதிவான அதிகபட்ச மதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 46