தென் கொரிய நாட்டில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்புப் கிடைப்பதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டமையினால், வெளிநாட்டவர்களை தங்களது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருந்ததது.
இதனால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பலரின் கனவும் கலைந்திருந்தது.
எனினும், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விட்டப்பாடில்லை.
இருந்தாலும், தடுப்பூசிகளை ஏற்றி, சுகாதார வழிமுறைகளின்படி குறிப்பிட்ட சில நாடுகள் வெளிநாட்டவர்களுக்கு அண்மைக்காலமாக தொழில்வாய்ப்பை வழங்கி வருகிறது.
இதன்படி தென் கொரியாவும், வெளிநாட்டவர்களுக்கு தமது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து வருகிறது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 169 இலங்கையர்களுக்கு தென் கொரியா தொழில்வாய்ப்பு வழங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன கொரிய அரசுடனான உடன்படிக்கைக்கு அமைவாக கொரியாவுக்கான வேலைவாய்ப்பு இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com