இனிப்பு பண்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக இனிப்பு பண்ட உற்பத்தியாளர்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உற்பத்தி நடவடிக்கைகள் 30 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக இனிப்பு பண்ட உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

150 முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த உற்பத்தி தொழில் கடந்த 2 வருடங்களாக, உற்பத்திக்கான மூல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, மாற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும், வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு உற்பத்தி பொருட்களை குறித்த நேரத்தில் அனுப்புவதற்கான கொள்கலன் சேவைகளை பெற முடியாது உள்ளதாக வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த நடைமுறை தொடருமானால், அடுத்த வாரமளவில் 40 சதவீத வீழ்ச்சி ஏற்படலாம் என இலங்கை இனிப்பு பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி. சூரியகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.

இனிப்பு பண்ட உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில், சம்பந்தபட்ட தரப்பினர் கொள்கையினை மேற்கொள்வதுடன், மூல பொருட்களை பெறுவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதுடன், தொழில் துறைக்கு அத்தியாவசிய எரிபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்