இந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படாலம் என உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி, காவல்துறைமா அதிபர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சுட்டிக்காட்டி இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான களநிலைமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதன் காரணமாக புலனாய்வு தரப்பினருக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்த மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தங்களது நாளாந்த நடவடிக்கைகளை வழமைப்போன்று மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
ஜூலை 5 – 6 இல் குண்டுத் தாக்குதல்? கடிதம் குறித்து சபையில் கேள்வி!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென் பகுதிகளில், வெளிநாட்டு உளவுச்சேவைகளின் பங்களிப்புடன் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
எனினும், இந்த தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக வடக்கு – கிழக்கில் பணியாற்றும் வெளிநாடுகளின் அலுவலர்கள் குறித்த தினங்களில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் குறித்த தகவலில் உண்மையிருக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபையில் கேள்வி எழுப்பினார்.
எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று பிரதி சபாநாயகர் பதில் வழங்கினார்.
இதேவேளை, இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும், உணர்வெழுச்சிகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதாக தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





