இந்திய கடன் எல்லை வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல்

கொலன்னாவை, முத்துராஜவளை, சப்புகஸ்கந்த முதலான எரிபொருள் களஞ்சியங்களிலும், தங்களது பேருந்து டிப்போகளிலும் உள்ள எரிபொருளை விடவும், அதிக எரிபொருள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இறுதி எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.

இந்த நிலையில், மேலும் 500 மில்லியன் கடனுக்கான அனுமதியை அவர்கள் வழங்கியுள்ளனர்.

அது தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதமளவில் அதனை இறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடற்றொழில் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 22 துறைமுகங்களுக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்