அபாயகரமான கட்டத்தில் இலங்கையின் பொருளாதாரம்

புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான செயற்பாடுகள் உள்ளனவா?

கலாநிதி அமீர் அலி

எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோருக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறையுடன், கண்டறிப்படாததும் அபாயகரமானதுமான பகுதிக்குள் இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இப்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது. விநியோகத் தட்டுப்பாடு தளர்த்தப்படாவிட்டால் மற்றும் நுகர்வோர் வரிசைகள் குறைக்கப்படாவிட்டால் நிலைமை விரைவில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான நெருக்கடியாக உருவாகலாம். இரண்டு மடங்கு பின்னடைவான விளைவுகளை நாடு எதிர்கொள்கிறது.

உள்நாட்டில் சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் பேரழிவு, தொழில் துறை பொருளாதாரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணவீக்க எதிர்ப்பு நடவடிக்கைகளால் எழும் பாதகமான சந்தை எதிர்வினையுடன் ஒத்துப்போகிறது. முதன்முதலில் பேரழிவைக் கொண்டு வந்த ஒரு பிரபலமற்ற ஆனால் எதேச்சதிகார ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு தேவைப்பாட்டை திருப்திப்படுத்தும் பிரதமரின் தலைமையில் மாற்றியமைக்கப்பட்ட மேலாளர்கள் குழுவுக்கு குறைந்தபட்சம் கூறுவது ஒரு கனவாக இருக்கும். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் குறித்த மோதல் வெளிப்படுவதால், இரு தலைவர்களுக்கிடையிலான தொழில் ரீதியான உறவுகள் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் நடந்த போரினால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் விநியோக இடையூறுகளும் மந்த நிலையும் தொழில்மயமான உலகில் பணவீக்கத்தின் தீமை மற்றும் அதன் அவலட்ச ணமான தலையை உயர்த்த இடமளித்ததுடன் பணவீக்கத்துக்கு எதிரான போராட்டம் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கான வழக்கமான பாதையை எடுத்துள்ளது. 1994 க்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா அதை 0.75% உயர்த்தியது, அவு ஸ்திரேலியாவும் அதையே செய்தது, பிரிட்டன் 1.75% மாக உயர்த்தியது மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் நாட்களில் 50 அடிப்படைப் புள்ளிகள் உயரும் என்று யோசனை செய்து வருகிறது. இந்த அதிகரிப்புகள் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்துக்கு இது இறக்குமதி பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைதல் வாழ்க்கைச் செலவை உச்சகட்டமாக அதிகரிக்கச் செய்யும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் ஏனைய தேவைகளில் பற்றாக்குறையுடன் ஏற்கனவே உயிர் வாழப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது மிகவும் வேதனையான வாழ்க்கையை ஏற்படுத்தும். நல்ல நிலைக்கு வருவதற்கு முன் விட யங்கள் மோசமாகி விடும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கை ஒப்புவமையற்ற தீவிரத்தன்மையை உணரவைக்கப் போகிறது.

கடன் மறுசீரமைப்புடன் கூடிய ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதிய ஸ்திரப்படுத்தல் பொதி மற்றும் அதன் விபரங்கள் இன்னும் தாமதமாகி உள்ளன. நடைமுறைக்கு வர ஒரு வருடம் இல்லையென்றால் குறைந்தது மாதங்களாவது ஆகும். அப்படியிருந்தும், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உடனடி நிவாரணத்துக்கான தாராளமான ஏற்பாடுகளுடன் அந்தப் பொதி வராத வரை, பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை வசதியாக இருக்காது.

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வு நீண்ட காலத்துக்கு சிறப்பாக செயற்படுகிறது மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள் செயற் பாட்டுக்கு வருவதற்கு முன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து நிதி திரட்டுவது விரைவுபடுத்தப்பட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை மத்திய வங்கியின் தலைவரும் ஏற்கனவே நாணய நிதிய ஆலோசகர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சில நிதி மற்றும் பண நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகள், பரும்படியாக்க பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அவசியமானவை என்றாலும், அவை நுகர்வோரின் பொருளாதார வலியை கணிசமாக அதிகரிக்கும். இந்தச் மறுசீரமைப்புகள் தற்போது குடும்பங்களை முடக்கும் விநியோகத் தட்டுப்பாட்டைக் குறைக்கப் போவதில்லை. எனவே, அடுத்த பன்னிரண்டு மாதங்களில், உலகில் எங்கிருந்தும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் மூலம் நாட்டுக்கு நேரடி மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. குறிப்பிட்ட வட்டத்துக்கு வெளியே சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

அத்தகைய உதவி இல்லாவிட்டால், ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லற்கே கருத்துப்படி, இலங்கை “முழு நிலையில் மனிதாபிமான அவசரநிலை”யில் இருக்கும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இது போன்ற மோசமான சூழ்நிலையை ஒருபோதும் எதிர்கொள்ளாத ஒரு தீவுக்கு எத்தகைய அதிர்ஷ்டங்கள் அல்லது துரதிர்ஷ்டங்கள் வருகின்றன . இந்தப் பேரிடருக்கு உடனடிக் காரணமான பொருளாதார மேலாளர்கள் இப்போதும் ஆட்சியில் இருப்பதுதான் வேடிக்கை.

இதுவரை இந்தியாவும், குறைந்தளவில் சீனாவும் மட்டுமே கைகொடுக்க முன் வந்துள்ளன. உதவி செய்ய அவர்கள் தயாராக இருப்பதற்கான காரணம் பரோபகாரத்திலும் பார்க்க புவிசார் அரசியலின் எல்லை வீச்சுக்குள் விழுகிறது. ஜப்பானும் உதவுவதாக உறுதியளித்துள்ளது. அவசர கால உணவுத் திட்டத்துக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களிடமிருந்து உதவிகள் அவ்வளவு எளிதாகவும் தாராளமாகவும் கிடைக்காது. இது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சரியான பாதையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று சிந்திக்க வைக்கிறது.

எரிபொருள் நெருக்கடியானது பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்துள்ள நிலையில் ஒபெக் (அரபு பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) நாடுகளுடன் இலங்கை தனது மிகவும் நட்புறவைப் பேணியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். சில காலங்களுக்கு முன்பு, ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த தருணத்தில் இதே போன்ற நெருக்கடி ஏற்பட்டபோது, ​​அவர் உடனடியாக தனது வெளியுறவு அமைச்சர் ஹமீதை லிபியாவுக்கு அனுப்பினார், மேலும் கடாபி தனது விருந்தினரை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பவில்லை. ஜே.ஆருக்கு முன்னர், சிறிமாவோவின் இடதுசாரிக் கூட்டணி அரசாங்கத்தின் போது அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டபோது, ​​அவரது கல்வி அமைச்சர் மஹ்மூத் தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவியைப் பெற அனுப்பப்பட்டார். இது அந்த நெருக்கடியை தற்காலிகமாக குறைக்க உதவியது. இன்றும், இலங்கையின் மேலதிகமாக இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது மத்திய கிழக்கு நாடுகள் தான். அந்த உழைப்பில் இருந்து உழைத்து சம்பாதித்த டொலர்கள்தான் திறைசேரியின் கஜானாவை குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிரப்புகிறது. எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில் புதிய பொருளாதார முகாமையாளர்கள் மத்திய கிழக்கிற்கான முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?

உண்மையைச் சொல்வதென்றால், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் உலகின் அந்தப் பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு சரியான ஆள் அல்ல, அவர் ஒரு முஸ்லிம் இல்லை என்பதற்காக அல்ல, மாறாக அவரின் உணர்திறன் இல்லாமை மற்றும் ஜி.ஆரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ளூர் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இணங்குவதால். முஸ்லிம் உலகத்துடன் சிறப்பாக இல்லை . 2020 இல் ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்துக்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தீர்மானம் அரபு நாடுகளுடன் உறவு சீர் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை எச்சரித்திருக்க வேண்டும். இது முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தின் குறுகிய நலன்களுக்காக கடந்த காலத்தை மீண்டும் எழுப்புவதற்காக அல்ல, மாறாக அவசர காலத்தில் அந்தப் பிராந்தியத்தின் கலாசார நுணுக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அரபு மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை மீளச் சிந்திப்பதற்கு எரிபொருள் நெருக்கடி ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. ஒரு பழைய தமிழ் பாடல் வரி உள்ளது: ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்கணும்…

அணிசேரா அமைப்பிலிருந்து ராஜபக்ஷ ஆட்சி விலகி இருப்பதும், இந்தியா, மேற்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் இழப்பில் சீனாவின் பக்கம் சாய்வதும் தற்போது விலை உயர்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியா நெருங்கி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அது மறைமுகமான நோக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவை விஞ்ச சீனாவும் தொடர்ந்து உதவி செய்யும். ஆயினும்கூட, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை ஆட்சிக்கு புதிய ஏற்பாடு தேவை. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில் அரபு-இலங்கை உறவுகளில் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு தீவிரமான பரிகாரம் தேவை. அதற்கு அவர்கள் பணியமர்த்தப்பட்ட பகுதியின் மொழியில் சரளமாகத் தெரிந்திருக்கக்கூடிய உயர் தகுதி வாய்ந்த மற்றும் தொழில் முறை இராஜதந்திரிகளின் குழு தேவைப்படுகிறது. நாட்டில் தற்போது ஆங்கிலம் தவிர எத்தனை வெளிநாட்டு மொழி பேசும் தூதர்கள் உள்ளனர்? முழு வெளியுறவுக் கொள்கைத் துறையிலும் ஒரு மறுசீரமைப்பு தேவை.

அரசியலையோ, சித்தாந்தத்தையோ பொருளாதாரத்துடன் கலப்பதற்கான நேரம் இதுவல்ல. உடனடியாக, மக்கள் மற்றும் குறிப்பாக பிள்ளைகளின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது. யுனிசெப் பேச்சாளரின் கூற்றுப்படி, தெற்காசியாவிலேயே பிள்ளைகள் ஊட்டச்சத்தின்மையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தச் சிறுவர்கள் நாட்டின் எதிர்கால சொத்து. புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் , பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான செயற்பாடுகள் உள்ளனவா?

சில காலத்துக்கு முன்னர், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.செயலாள ர் நாயகத்தை சந்தித்தபோது , புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களை சந்தித்து தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதாக ஜி.ஆர். உறுதியளித்தார். அது நடக்கவே இல்லை. அண்மையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாட்டுக்கு எந்த ஒரு பயனாளியிடமிருந்தும் உதவி தேவைப்படும் வேளையில், புலம்பெயர் தமிழர்களிடம் பொருளாதார அல்லது நிதி உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று தனது ஏமாற்றத்தை சுவிட்சர்லாந்திலிருந்து வெளிப்படுத்தியிருந்தார் . ஆட்சியாளர்கள் தரப்பில் ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மை?

இலங்கை வங்கியின் 14ஆவது ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குழுநிலை கலந்துரையாடலில் , தற்போதைய பேரழிவின் தோற்றத்தை சுருக்கமாகக் கூறிய துடன்,சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் வெற்றியில் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான தேவை திறைசேரியின் கஜானாவுக்கு வடிகாலை ஏற்படுத்தியது என்ற கசப்பான உண்மையை அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் வெள்ளை யானைகளை உருவாக்கி பராமரிக்கும் திட்டங்களால் அந்தக் கோரிக்கை உருவாக்கப்பட்டது – ஆளுநர் இராஜதந்திர ரீதியில் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ராஜபக்ஷ ஆட்சி இந்த வீண் விரயத்துக்கு பெயர் போனது. இப்போதும் கூட, பட்ஜெட் செலவின சம்பளத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை உட்கொள்ளும் 300,000 இராணுவத்தை பராமரிப்பதில் என்ன பயன்? இந்தத் தேவையற்ற ஊதாரித்தனத்துக்கு மக்கள் தங்கள் குறைந்தபட்ச வசதியைப் புறக்கணிப்பதன் மூலம் விலை செலுத்து கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூழ்கும் கப்பலை நிலைநிறுத்துவதற்கு காலத்தை எடுக்கும். உடனடி கவலை என்னவென்றால், குடும்பங்களின் அன்றாடத் துன்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதனால்தான் வழமைக்கு மாறாக சிந்திக்க வேண்டும்.

கொழும்பு டெலிகிராப்


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்