அரசாங்கம், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பாக உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
ஒரு நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.
எவ்வாறாயினும், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை சில முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன.
அரசாங்கம், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்துகின்றது.
எனினும் நாட்டு மக்களுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலரை இது மட்டுப்படுத்துகின்றது.
வெளிநாட்டு கடன்களை வழங்குவதில் மாத்திரம் ஒரு நாடு பெருமை அடைந்து விடாது.
நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர் மூடிய அறையில் கடந்த தினத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய பொறுப்புக்கு அமைய, நெருக்கடி சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கான மூலோபாயங்களை ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் தாமும் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com