2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் உறுப்புரையின் கீழ் புதிய ஒழுங்குவிதி ஒன்றை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சலில் இடம்பெறும் ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்காக 06 மாதகாலத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக குறித்த ஒழுங்குவிதி ஒன்றை வெளியிட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றது.
குறித்த கட்டளை மூலம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது உகந்ததென இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை பரிந்துரைத்துள்ளது.
அதற்கமைய, புதிய ஒழுங்குவிதி ஒன்றை வெளியிடுவதற்கும், பின்னர் குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





