வெளிநாடுகளிலிருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள்!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போது, போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதிகள் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவை போலி முகவரிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.

சோதனையின்போது, சந்தேகத்துக்கிடமான 5 பொதிகளை சோதனையிட்டபோது, அவற்றில் 472 கிராம் குஷ் எனப்படும் போதைப்பொருளும் , எக்டஸி எனப்படும் 302 போதை மாத்திரைகளும் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றின் பெறுமதி சுமார் 9 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்