இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவா், இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம், பிரதிப் பொது முகாமையாளரின் அனுமதியின்றி மின்சாரை சபை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை அலுவலக வாகனங்கள் மூலம் கொழும்புக்கு வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது,
அவ்வாறு செய்தால் அது அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக கருதப்படும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
Post Views: 63