பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்நோக்குவதாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பண புழக்கங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால், இந்த நிறுவனங்களினால், ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றிற்கான கொடுப்பனவுகளை வைப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல தொழில் வழங்குனர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்தவோ அல்லது வேறு நிதிக்கேற்ற தொழில் வழங்கும் செயல்பாட்டிற்கு மாற்றுவது குறித்தோ கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் 45 சதவீதத்தை சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களே இதுவரை காலமும் வழங்கி வந்தது.
பெரும்பாலான நிறுவனங்கள் வரிக் கொடுப்பனவுகளை நிறைவேற்றுவது மற்றும் ஊழியர்களுக்கான சட்டபூர்வமான கொடுப்பனவுகளுக்கான நிதியினை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com