உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவநடவடிக்கைக்கு தண்டனை வழங்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவுள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடைவிதிப்பதற்கு அமெரிக்காவின் இரு கட்சிகளும் பைடனிற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் எண்ணெய்க்கா ரஷ்யாவை நம்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயக்கம் வெளியிட்டுள்ள நிலையில் அமெரி;க்கா இந்த நடவடிக்கையை ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கவுள்ளது.
மேற்குலகம் எண்ணெய்க்கு தடை விதித்தால் ஜேர்மனிக்கான எரிவாயுவிநியோகத்தை தடை செய்யப்போவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யாவிடமிருந்து 40 வீதமான எண்ணையையும் 30 வீத எரிவாயுவையும் பெறுகின்றதால் அதற்கு மாற்றுவழிகள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்காவின் தடைகள் தனது பொருளாதாரத்தை மிகமோசமாக பாதிக்கும் என்பது தெரியும்.
ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கும்,.
தடைகள் குறித்த அச்சம் காரணமாக பிரெணட் கச்சா எண்ணையின் விலை ஒரு பரல் 139 டொலராக அதிகரித்துள்ளது என முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.14 வருடங்களில் இதுவேஅதிகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடைகளை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தைகளின் போது சர்வதேச அளவில் விநியோகத்தை தொடர்ந்து பேணுவது குறித்து முக்கியமாக ஆராயப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டன் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினரும் குடியரசுக்கட்சியினரும் ரஸ்யா பெலாரசுடனான வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வதற்கான இரு தரப்பு உடன்பாட்டினை அறிவித்துள்ளதை தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய்க்கு அமெரிக்கா தடைவிதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை எடுப்பது இந்த யுத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் அமெரிக்கா தனது சகாக்களுடன் உறுதியாக உள்ளது என்ற செய்தியையும் தெரிவிக்கும் என இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com