ரஜினி மகள் ஐஸ்வர்யா திடீர்னு எங்கு சென்றார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய ஆவண படத்திற்காக ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டிற்கு திடீரென சென்றுள்ள சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ள

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க நடிக்க, இரண்டாவது ஹீரோவாக விக்ராந்த் நடித்திருந்தார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணம், இப்படத்தின் முக்கிய கட்சியின் படப்பிடிப்பு ஃபூட் டேஜ் தொலைந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா.

இதைத்தொடர்ந்து தற்போது இவருடைய விவாகரத்து விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக சென்று ,கொண்டிருக்க, அடுத்ததாக பிரபல மருத்துவர் ஒருவரை பற்றிய ஆவண படத்தை தயாரித்து – இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இதற்காக கோட்டையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற செவிலியர் ஷீலாவின் மாமியார், எல்சம்மா ஜோசப்பை என்பவரை பேட்டி எடுப்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேரளாவிற்கு வந்ததாக ஷீலா கூறியுள்ளார்.

இது குறித்து வெளியாகி ஷீலா கூறியுள்ள தகவலில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருவதாக எங்கள் யாரிடமும் கூறவில்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் இங்கு வருவதாக அறிவித்தார். ஆனால் அவர் யாருடன் வருகிறார் என்பது பற்றி எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் சர்பிரைஸாக எங்கள் வீட்டிற்கு வந்தது, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும், அனைவரிடமும் பழகினார் என தெரிவித்துள்ளார்.

எல்சம்மா கோட்டையும் மருத்துவக் கல்லூரியில், 24 ஆண்டுகள் செவிலியராக பணிபுரிந்தவர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சிபி மேத்யூவுடன் பணியாற்றி உள்ளார். ஐஸ்வர்யா ரியல் ஹீரோவாக பார்க்கப்படும் மேத்தியூவை பற்றி தான் ஒரு ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்காக மேத்யூவுடன் பணியாற்றிய எல்சம்மாவை பிரத்தியேகமாக பேட்டி கண்டுள்ளார்.

டாக்டர் மேத்யூ சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவர் மருத்துவத்துறையில் குறிப்பாக கேன்சருடன் போராடிய பலரை அதில் இருந்து மீட்க போராடிய போராட்டங்களை கண்முன் நிறுத்தும் விதமாகவே இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

சிறப்புச் செய்திகள்