யூரியா உரத்தை பெற்றுக்கொள்ள உதவி வழங்க உலக வங்கி இணக்கம்

2022ஆம் ஆண்டுக்கான பெரும்போகத்தின் நெற் பயிர்செய்கைக்கு யூரியா உரத்தை பெற்றுக்கொள்ள உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரசாயன உரம் பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக வங்கி அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த இணக்கப்பாடு வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்போகத்திற்கு தேவையான யூரியாவை உலக வங்கியின் அணுசரனையின் கீழ் வழங்குவதாக அவர்கள் இதன்போது, உறுதியளித்தாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் எதிர்வரும் பெரும்போகத்தில் வெற்றிகரமாக விளைச்சலை பெற முடியும் என எதிர்ப்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போகங்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் உரத்தை வழங்குவதாக உறுதியளித்து அதனை மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய கல்ஓயா விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்