யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பசுமை விவசாயத்திற்கு இராணுவம் துணை நிற்கும்!

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பசுமை விவசாயத்திற்கு இராணுவம் தங்களால் ஆன உதவிகளை வழங்குவதோடு பென்றோம் துணை நிற்கும் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஜெனரல் டி ஜிஎஸ் செனரத் யாப்பா தெரிவித்தார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் இடம்பெற்ற பசுமை விவசாயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் வழிநடத்தலில் கீழ் பசுமை விவசாய திட்டம் நாடு பூரா செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இன் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ் மாவட்டத்தின் கட்டளைத் தளபதி என்ற வகையில் எனது தலைமையில் குறித்த செயற்திட்டம் சகல இடங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறித்த திட்டமானது இரசாயனப் பசாளைகளில் இருந்து விடுபட்டு இயற்கை பசளையை ஊக்குவித்து அதன்மூலம் பெறப்படுகின்ற ஆரோக்கியமான உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.

அண்மையில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் பசுமை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்தோம்.

திட்டம் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவு படுத்தி அவர்களை குறித்த துறையில் வளர்ச்சி அடையச் செய்வதே எமது நோக்கம்.

பசுமை விவசாய திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக மாவட்ட விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைத் திணைக்களங்கள் ஊடாகப் பயிற்சிகள் வழங்கப்படும்.

ஆகவே பசுமை விவசாயத்தை ஊக்குவித்து நஞ்சற்ற உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கமநல ஆணையாளர் நிஷாந்தன் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் வடமாகாண விவசாய உதவி பணிப்பாளர் திருமதி அஞ்சனா ஸ்ரீரங்கன் மற்றும் கமநல உத்தியோகத்தர்கள் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்