2021ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை, மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
198 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், அவர் தேசிய ரீதியில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக, பாடசாலை கற்றல் செயற்பாடுகள் கடந்த வருடம் பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், சவால்களுக்கு மத்தியில் தாம் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாக மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின்னர் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தவசீலன் புவனாஜினி அதிகளவான புள்ளிகளை பெற்றுள்ளார்.
அவர் இந்த பரீட்சையில் 162 புள்ளிகளை பெற்றுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த மாணவி இவ்வாறு அதிக புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com