யாழில் ஆசைப்பட்டு 250000 ரூபாவை இழந்த இருவர்

யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார்.

பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதேபோல் சங்கரத்தை துணைவி பகுதியில் உள்ள ஆண் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 60 ஆயிரம் ரூபாயை சம்பத் வங்கியிலில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

அவரும் பணத்தை வைப்பிலிட்ட பின்னர் அந்த இலக்கத்திற்க அழைப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்