மேலும் ஒருதொகை டீசலை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்

இலங்கைக்கு மேலதிகமாக ஒருதொகை டீசலை வழங்குவதற்கு இந்தியா இணங்கி இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் எல்லை வசதிக்கான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 7 மாதங்களுக்கு பெற்றோல், டீசல் மற்றும் விமான எண்ணெய் வழங்கப்படும்.

இதற்கு மேலதிமாக அவசர தேவைக்காக 40,000 மெட்ரிக் டன் டீசலை வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குறித்த தொகை டீசலை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக, இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்