மூடப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றது லிட்ரோ காஸ்

லிட்ரோ காஸ் நிறுவனம் முற்றாக மூடப்படும் நிலையை தவிர்ப்பதற்கு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை (12.5) 2000 ரூபாவினால் அதிகரிக்கவேண்டிய நிலை காணப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ நிறுவனத்தை பாதுகாப்பதற்கான சங்கத்தைச் சேர்ந்த தொழில்சார் வல்லுனர்கள் என தங்களைக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் சிலர் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளனர்.

2021 இல் இலங்கை நுகர்வோர் அதிகார சபை எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை ( எல்.பீ) அதிகரிக்க மறுத்ததால் நிறுவனத்திற்கு 11 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய விலையில் எங்களால் எரிவாயுவை விநியோகம் செய்ய முடியாது என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டாளர் பியல் கொலம்பஹெட்டிகே தற்போதைய விலையில் சமையல் எரிவாயுவை வழங்கினால் நாங்கள் நிறுவனத்தை மூட வேண்டியதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எல்.பீ காஸ் விலை ஒரு மெட்ரிக் தென் 880 அமெரிக்க டொலராக காணப்பட்டவேளை கொள்வனவு செய்யப்பட்டு தற்போது இலங்கை வந்துள்ள எரிவாயுவை 2675 ருபாய்க்கு ( ஒரு சிலிண்டர்) விற்பனை செய்தால் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் எல்பீ காஸின் விலை ஒரு மெட்ரிக் தொன் 1018 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக நாங்கள் 200 மில்லியன் டொலர் வரை இழக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 4462. ரூபாய் என மதிப்பிடப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் 2000 ரூபாயினால் விலையை அதிகரிக்காவிட்டால் மூன்று மாதங்களில் லிட்ரோ காஸ் நிறுவனம் மூடப்படும் ஆபத்து காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வந்துள்ள சமையல் எரிவாயு மூலம் 200 மில்லியன் இழப்பை சந்தித்தால் அடுத்த கப்பலிற்கான ரூபாய்களையும் டொலர்களையும் நாங்கள் எங்கிருந்து எப்படிப் பெறுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை,நிறுவனம் மூடப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்