மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு! நீண்ட வரிசையில் மக்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விநியோகம் இல்லாமை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

எரிபொருள் கிடைக்காததால் பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி(பெளசர்) உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவன தாங்கி ஊர்தி( பௌசர்) உரிமையாளர்கள் சங்கமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து சேவைகளை புறக்கணித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

தொடருந்துகள், அரசுக்கு சொந்தமான தாங்கி ஊர்திகள் இந்த விநியோகத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்