மின்சார நெருக்கடி உடனடியாக தீர்க்கப்படும்!

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொதுமக்களுக்கும் உறுதியளித்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடன் அமுலாகும் வகையில், மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதை, திறைசேரியும், மத்திய வங்கியும் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

பொதுப்பயன்பாட்டு ஆiணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார விநியோகத்திற்கு அவசியமான எரிபொருளை பெறுவதற்கான உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஏழரை மணிநேர மின்வெட்டிற்கு அனுமதி வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்,மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கான எரிபொருள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களால் எதுவும் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்