முன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட் டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் சம்பளக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகக் கடமையாற் றினார்.
இந்நாட்டில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அரசியல் வாதியான விஜேமு லொக்கு பண்டாரவின் புதல்வனான உதித லொக்கு பண்டார ஒருமுறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதுடன் கடந்த பொதுத் தேர்தலில் அப்புத்தளை பிரதேசத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com