மனித பாவனைக்கு உதவாத 40, 000 கிலோ உருளை கிழங்குகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள இரண்டு தனியார் களஞ்சியசாலைகளிலிருந்து, மனித பாவனைக்கு உதவாத 40, 000 கிலோகிராம் நிறையுடைய உருளை கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை நகர முதல்வர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை நகர முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த இரு களஞ்சியசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து வர்த்தகர் ஒருவரால் இறக்குமதிசெய்யப்பட்ட குறித்த உருளை கிழங்குகளை, பெண்கள் இருவரை ஈடுபடுத்தி சுத்தம் செய்து, அவற்றை பழுதடையாத உருளை கிழங்குகளுடன் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வருகைத்தந்துள்ள சில வர்த்தகர்களினால் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நாளொன்றிற்கு 35 தொடக்கம் 40 வரையான கனரக வாகனங்கள் வருகை தருவதாகவும் தெரியவந்துள்ளன.

இந்நிலையில், மேற்படி இரு களஞ்சியசாலைகளையும் முத்திரையிடுவதற்கு (சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்