மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவமானது மாறும்தன்மை கொண்டதாகவும் நுட்ப செயன்முறையுடையதாகவும் காணப்படுவதுடன், இது பொதுவாக நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்கள் உடனடியாக கிடைப்பனவாகவுள்ளதனையும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடையும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனையும் உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சொத்துக்களின் உள்ளடக்கம், நாணயக் கலவை, திரவத்தன்மை தேவைப்பாடுகள், தவணைக் காலம், இலாபத்தன்மை, பாதுகாப்பு போன்ற ஏனைய முதலீட்டுச் சாதனங்களுடன் தொடர்புபட்ட பண்புகளுடன் பொருத்தமான ஒதுக்கு முகாமைத்துவக் கொள்கைகளின் பின்பற்றுதலானது நாட்டிற்கு நாடு மாறுபடுவதுடன் நாட்டின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளைச் சார்ந்து காணப்படும்.

இப்பின்னணியில், 2021 திசெம்பர் இறுதிக் காலப்பகுதியிலுள்ளவாறு மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு நிலைமையின் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் தொடர்புடைய பல்வேறு தவறான வழிநடத்தல்கள் மற்றும் பிழையான விளக்கங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அலுவல்சர் ஒதுக்குகளின் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒதுக்கு முகாமைத்துவத் தேவைப்பாடுகளின் சகல அம்சங்களையும் கருத்திற்கொண்டு தற்போதைய ஒதுக்கு முகாமைத்துவத் தேவைப்பாடுகளுடனும் முன்னுரிமைகளுடனும் இசைத்து செல்லும் வகையிலேயே காணப்படுகின்றன என்பதனை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. உண்மையில், 2008 இறுதிப் பகுதியளவில் மத்திய வங்கியின் தங்க இருப்பானது ஐ.அ.டொலர் 92 மில்லியன் (ஐ.அ.டொலர் 2.6 பில்லியன் கொண்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் 3.6 சதவீதம்) பெறுமதியாகவே விளங்கிய போதும் 2014 இறுதியளவில் ஐ.அ.டொலர் 893 மில்லியனிற்கு (ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் கொண்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் 10.9 சதவீதம்) படிப்படியாக அதிகரித்திருந்தது. எனவே, நிலவுகின்ற ஒதுக்கு முகாமைத்துவ முன்னுரிமைகளுடன் இசைந்து செல்லக்கூடியவாறாக மத்திய வங்கியின் தங்க இருப்புக் கொள்வனவு, தக்கவைத்தல் அல்லது திரவப்படுத்தல் தேவைப்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் ஒதுக்கிலுள்ள தங்க இருப்பின் பங்கு காலத்திற்குக் காலம் மாற்றமடையக் கூடியதென்பது தெளிவாகின்றது.

இப்பின்னணியில், 2021 இறுதியளவில் மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டின் அடிப்படையில் அதன் சொத்துப்பட்டியலில் ஐ.அ.டொலர் 175 மில்லியனிற்கு (ஐ.அ.டொலர் 3.1 பில்லியன் கொண்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் 5.6 சதவீதம்) குறைவடைந்திருப்பினும், வெளிநாட்டு ஒதுக்கு மட்டங்கள் ஒதுக்கு சொத்துப்பட்டியலின் உள்ளடக்கத்தில் மாற்றமொன்றினை உத்தரவாதப்படுத்தும் பெறுமானங்களுக்கு வளர்ச்சியடையும் போது தங்க இருப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் மத்திய வங்கி பரிசீலிக்கும்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱