பொருளாதார பின்னடைவால் மனிதாபிமான நிதி உதவி

தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பின்னடைவு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமான நிதி உதவியினை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 80,000 வறிய குடும்பங்களுக்கு 7 கோடியே 40 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக ஒளடதங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அற்ற நிலையில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் குடும்பங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நிதி உதவி வழங்கப்படுகின்றது.

மின்சார துண்டிப்பு மற்றும் காகித பற்றாக்குறை காரணமாக ஏராளமான சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் நிதி உதவி உட்பட பற்றாக்குறையான ஒளடத விநியோகம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி உதவி வழங்குவதில் கர்ப்பிணி பெண்கள், சிறார்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்