எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவருக்கும் தெரியாத இந்த உடன்படிக்கையை அரசாங்கத்தினால் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படாவிட்டால், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டால். பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும்.
எவ்வாறிருப்பினும், முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்புக்கு செல்லத் தயாரில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.