இலங்கை பேருந்து கட்டணம் அதிகரிப்பு

இலங்கை கனியவள கூட்டுத்தாபனமும், எரிபொருட்களின் விலையை அதிகரித்ததை அடுத்து, பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்கப்படாவிட்டால், கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டீசல் மானியம் கிடைக்காவிட்டால், தமது சங்கத்தினால், பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து துறையை மீட்க டீசல் மானியம் அவசியமாகும்.

இதன்படி, 121 ரூபா என்ற பழைய விலைக்கு டீசலை வழங்குவதுடன், குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு 100 லீற்றர் டீசலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு 200 லீற்றர் டீசலும் வழங்கினால், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.

இல்லாவிட்டால், கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.

டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஆகக்குறைந்த கட்டணம் 25 முதல் 30 ரூபா வரையில் இருக்க வேண்டும்.

ஏனைய கட்டணங்கள், 30 சதவீதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது தங்களின் யோசனையாகும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும், ஏனைய கிலோமீற்றர்களுக்கு 55 ரூபா என கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்