புத்தாண்டிற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால், புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களைப் போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரச சேவை சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதன்படி, சம்பளம் வழங்கும் திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்