புதிய தொழிலை தொடங்கியுள்ள சினேகன் மற்றும் கன்னிகா

தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன்.

முதல் பாடல் பெரிய ரீச் கொடுக்கவில்லை, அடுத்து 2001ம் ஆண்டு பாண்டவர் பூமி என்ற படத்தில் வந்த தோழா தோழா தோள் கொடு தோழா பாடல் இவருக்கு பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

சாமி படத்தில் இடம்பெற்ற கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா போன்ற பாடல்கள் சினேகனுக்கு பெயர் வாங்கி கொடுக்க தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடலாசிரியராக பயணித்து வருகிறார்.

பிக்பாஸ் முதல் சீசனிற்கு பிறகு தான் அட இவர் இந்த பாடல்களை எல்லாம் எழுதியுள்ளார் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்துகொண்டார் சினேகன். தற்போது சினேகன் மற்றும் கன்னிகா ரவி சேர்ந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

சினேகம் ஹெர்ப்ஸ் என்ற பெயரில் ஹெர்பல் ஹேர் ஆயில் பிராண்ட் எண்ணெண் தொழில் தொடங்கியுள்ளனர்.

சிறப்புச் செய்திகள்