பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி இன்று மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
சுங்கப்பிரிவின் பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதத்த சில்வா இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்படி, 45 கழிவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தின் சீ.ஐ.சீ.டி முனையத்திலிருந்து கப்பலில் ஏற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ இரசாயன கழிவுகள் உள்ளிட்ட 242 கொள்கலன்கள் 2019ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த கொள்கலன்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com