பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாதாம்

கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி ஃபிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், ஃபிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது என்ற வரைமுறை உண்டு.

சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைத்துவிடுவார்கள். இது தவறு. பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை காய்கறிக்கான பகுதியில் வைக்காமல் ஃபிரிட்ஜ் கதவில் இருக்கும் அறைகளில் வைக்கலாம்.

சூடான பொருட்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைக்கக்கூடாது. அவற்றின் வெப்பநிலை ஃப்ரிட்ஜ் முழுவதும் பரவி, அங்கிருக்கும் வெப்பநிலையை அதிகரித்துவிடும். இதனால் மின் செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போகவும் கூடும்.

ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக்கூடாது. பொதுவாகவே மற்ற அறைகளைவிட சமையல் அறையின் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும். அங்கே வைப்பதால் ஃபிரிட்ஜ் உள்ளே குளிர்ச்சி குறையலாம்.

சிலர் ஃபிரிட்ஜில் அவ்வளவாகப் பொருட்கள் இல்லை என்று அடிக்கடி அணைத்து வைத்துவிடுவார்கள். இது தவறு. என்னதான் 6 அல்லது 8 மணி நேரம் வரை அனைத்து வைத்திருந்தாலும் மீண்டும் ஆன் செய்யும்போது ஃபிரிட்ஜ் முதலில் இருந்து வேலைசெய்ய ஆரம்பிக்கும். இதனால் மின்செலவு அதிகரிக்கும். வெயில் காலம், குளிர்காலம் என தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி ஃபிரிட்ஜின் குளிர்ச்சியை மாற்ற வேண்டும்.

சிறப்புச் செய்திகள்