பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான அரச வங்கியொன்றிலிருந்த வங்கிக்கணக்கொன்றிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம், பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடியாக பெறப்பட்டுள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அவ்வாறு விஷேட விசாரணை ஒன்றினை நடாத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அரசின் நம்பகரமான தகவல் வட்டாரங்கள் வெளிப்படுத்தின.

எவ்வாறாயினும் நேற்று மாலையாகும் போதும் அது குறித்த அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் ஆரம்பகட்ட தேடுதல்களின் போது தெரியவந்துள்ளது.

குறித்த வங்கிக் கணக்கில் பணம் குறைந்துள்ளமை தொடர்பில் தேடிப் பார்த்த போதே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மகனான மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான, சில காலம் அவரது தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டவர் எனவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில், பண மோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த நபர் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறபப்டுகிறது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com