பால்மா இறக்குமதி செய்வதில் மீண்டும் சிக்கல்!

டொலர் தட்டுப்பாடு காரணமாக பால்மாவை இறக்குமதி செய்வதில் மீள பிரச்சினை எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்று தருமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா நிறுவனங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 250 ரூபாவால் அதிகரித்தன.

இதற்கமைய ஒரு கிலோகிராம் பால் 1,195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 400 கிராம் பால்மா 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்