இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை, சுகாதார அமைச்சின், உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது.
இரசாயன திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹிரு சி.ஐ.ஏவினால், அது தொடர்பில் அண்மையில் வெளிப்படுத்தப்பட்டது.
இரசாயன திரவியங்களைப் பயன்படுத்தி, மெனிங் சந்தையில் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் இதன்போது வெளியிடப்பட்டது.
இது குறித்து, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை உள்ளிட்ட சில நிறுவனங்கள், நேற்றைய தினம் கூடி ஆராய்ந்தன.
இந்த விடயம், உணவு தொடர்பான சட்டத்தின் கீழ் உள்ளபோதிலும், குறித்த குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால், தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றும், நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இதேநேரம், பொருளாதார மையங்களில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்ற முறைமை குறித்து அறிக்கை கோருவதற்கும், இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எதிர்காலத்தில் அரச நிறுவனங்களைத் தெளிவுபடுத்தி, பொதுமக்களுக்குரிய வழிகாட்டலை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com