பதவி விலகினார் லிட்ரோகாஸ் தலைவர்

அமைச்சர் – அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை

குறுகிய அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளால் பாதிப்பு

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தேசரஜெயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

லிட்ரோ காஸ் நிறுவனத்தில் ஊழல் முடிவிற்கு கொண்டுவரப்படுவதை உறுதி செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகளை அவர் வர்ணித்துள்ளார்.

தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆதரவை வழங்கியபோதிலும் உரிய அமைச்சரோ நிதித்துறை அதிகாரிகளோ உரிய ஆதரவை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற பலர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவாமல் மாறாக பிழையான அறிக்கைகளை வெளியிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குறுகிய இலாபம் மீட்டும் அரசியல் கலாச்சாரம் லிட்ரோ நிறுவனத்தில் மாத்திரம்காணப்படும் விடயமல்ல மாறாக அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சூழலில் தொடர்ந்தும் என்னால் பணியாற்ற முடியாது என தெரிவித்துள்ள தேசரஜெயசிங்க 14 ம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

எரிவாயு விநியோகம் குறித்த கரிசனைகளிற்கு வெறுமனே உள்ளகரீதியில் மாத்திரம் தீர்வை காணமுடியாது இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைத்து பொருளாதார துறையினரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி- இறக்குமதிக்கான போதிய டொலர் இன்மை-தனியார் அரசவங்கிகளிற்குள் காணப்படும் பிரச்சினைகள்- சர்வதேச நிதி அமைப்புகளின் எதிர்வு கூறல் என அனைத்தும் காஸ் தொழில்துறை மீது நெருக்கடியை திணித்துள்ளன லிட்ரோவால் அந்த கரிசனைகளிற்கு தீர்வை காணமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்