இலங்கையின் பொதுக்கடன் நிலைபேறான தன்மையினை இழந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை அரசாங்கத்திற்கு பாரியதொரு தோல்வியாகும்.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கை முழு நாட்டு மக்களையும் கடனாளியாக்கியுள்ளது.
நாணயம் அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிட்டதற்கு நாணய நிதியம் கன்னத்தில் அறைந்தாற்போல் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தின் ஊடாக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்.
நிதியமைச்சர் பாராளுமன்றத்துடன் சுமுகமாக செயற்பட வேண்டும் ஸ்ரீ என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியம் தமது நிறுவனத்தின் 4 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார தன்மை குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள மோசமான விடயங்களுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.
இலங்கையின் பொதுக்கடன்கள் நிலைபேறான தன்மையினை இழந்துள்ளதாக மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை அரசாங்கத்திற்கு பாரியதொரு தோல்வியாகும்.
அரச வருமானத்தை அதிகரித்தல்,அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்தல் குறித்து நாணய நிதியம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
வரி அதிகரிப்பு மற்றும் வரி விரிவாக்கம் குறித்து நாணய நிதியம் அரசாங்கத்திற்கு விசேட ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
அரச செலவுகளை இயலுமான அளவு குறைத்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளது, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு வழங்கும் நிவாரணம் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கான செலவுகளை மட்டுப்படுத்தி அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டாம் என அறிக்கையில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
வீண் அரச செலவுகளை முழுமையாக குறைத்துக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்காது என அரசாங்க தரப்பில் உள்ள பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்கள்.
2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மாத்திரம் 1.6 ரில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.
நாணய அச்சிடலை விரைவாக மட்டுப்படுத்துமாறும் அல்லது நிறுத்துமாறும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு கன்னத்தில் அறைந்தாட்போல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதுடன்,ஒட்டுமொத்த மக்களும் கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
நிதி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றுடனும்,அரச பொது நிதிக்கான குழுவுடன் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
நிதி நெருக்கடிக்கு பாராளுமன்றின் ஊடாக மாத்திரமே தீர்வு காண வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றின் ஊடாக அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்.
நிதி விவகாரத்தில் அரசாங்கம் குறிப்பாக நிதியமைச்சு பாராளுமன்றுடன் சுமுகமாக செயற்படுவதில்லை.
நிதி நெருக்கடிக்கு பாராளுமன்றின் ஊடாக தீர்வு காண வேண்டுமாயின் முதலில் நிதியமைச்சர் பாராளுமன்றிற்கு வந்து நாட்டின் நிதி நிலைமை குறித்து உண்மை தன்மையினை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com