தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது.
பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளது.
மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ,நாட்டில் எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு முழு அளவில் நிவர்த்திக்கப்படும் என்று லிற்றோ காஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கேஸ் நிரப்பப்பட்ட ஒரு லட்சம் சிலிண்டர்கள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டதாக காஸ் நிறுவனம் மேலும் தெரிவித்தது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com