நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“கொடுக்க முடியும். ஆனால் அது அங்கே ஒரு பெரிய பிரச்சினை. நான் அதை அமைச்சரவைக்கு வழங்கு வேன்” என்று நிதி அமைச்சர் கூறினார்.
அவ்வாறான அறிக்கை கிடைத்தால் நல்லது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அடுத்த அமைச்சரவையில் அறிக்கையைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சர் இணங்கியுள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 690 மில்லியன் அமெரிக்க டொலர் என நிதியமைச்சு அமைச் சரவைக்கு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com