நாடளாவிய ரீதியாக 85 பில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி செயற்பாடுகள் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகச் செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்கள் மாவட்டச் செயலாளர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
85 பில்லியன் ரூபாவில் 40 சதவீதமானது மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும்.
ஏற்கனவே ஏனைய அமைச்சுகளால் மேற்கொள்ளப்படும் நாடளாவிய அபிவிருத்தி திட்டங்களுக்கு, மேலதிகமாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இது தவிர மேலதிகமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து தெரிவான 15 ஆயிரம் கிராம தொழில் முனைவோருக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com