தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

தேயிலை உற்பத்தியானது, 13 ஆண்டுகளின் பின்னர் வீழ்ச்சிப்போக்கில் பதிவாகியுள்ளது

கடந்த பெப்ரவரி மாதம் நாட்டின் தேயிலை உற்பத்தி, 18.16 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 20 சதவீத வீழ்ச்சியாகும் என தேயிலை சபையின் தரவுகளின் மூலம் அறியக்கூயதாக உள்ளது.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12.8 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் மாதமொன்றில் பதிவான ஆகக்குறைந்த தேயிலை உற்பத்தி இதுவாகும் என தேயிலை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்பட்ட இரசாயண உரத் தடை இதற்கு காரணமாகும் என குறிப்பிடப்படுகிறது.

தேயிலைத் தொழிற்துறைக்காக, அந்தத் தடை கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டபோதிலும், டொலர் பற்றாக்குறையால், உர இறக்குமதியானது, தேயிலை உற்பத்தியில் தாக்கத்தை செலுத்தியது.

இரசாயண உரத் தடைக்கு முந்தைய காலத்தில், இலங்கையின் வருடாந்த தேயிலை ஏற்றுமதி மூலம் 1.3 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்தது.

இந்த நிலையில், இலங்கையின் தேயிலை தொழிற்துறைக்கு தற்போது தாக்கம் செலுத்தும் புதிய காரணியாக, ரஷ்ய – யுக்ரைன் போர் அமைந்துள்ளது.

இலங்கையின் தேயிலையைக் கொள்வனவு செய்யும் முக்கியமான கொள்வனவாளர்களான ரஷ்யாவும், யுக்ரைனும், நாட்டின் தேயிலை உற்பத்தியில் 10சதவீதத்தை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்