தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெய் கலப்படம்?

தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெயை கலப்படம் செய்து பல வர்த்தகர்கள் மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

பாம் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை குறைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் முயற்சிப்பதாக தலைவரான ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது கடமைகளை மேற்கொள்ளும் போது வர்த்தகர்களை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெய் கலக்கப்படுவதால் பெரும்பாலான நுகர்வோர் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

எனினும் இந்த நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் பாமாயிலுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாகவும், இது பொருத்தமான முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக சந்தையில் பாமாயிலுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து கொள்ளையடிக்கும் மோசடி நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பாமாயிலுக்கான இறக்குமதி வரியை குறைக்க வர்த்தகர்கள் குழுவொன்று முயற்சித்து வருவதாகவும், இதன் மூலம் மீண்டும் தேங்காய் எண்ணெயுடன் பாமாயிலை கலக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெப்ரவரியில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்ததாகவும், வர்த்தகர்கள் அந்நேரத்தில் இலாபத்தைப் பெற முயற்சித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்