தேங்காயை 75 ரூபாவுக்கு விற்க நடவடிக்கை!

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தேங்காயை வருடம் முழுவதும் ரூ.75 என்ற நிலையான விலையில் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாக வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேங்காய் விலை அதிகரிப்பால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய்களை வழங்குவதே வேலைத் திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு நுகர்வோர் ஐந்து தேங்காய்களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் இதன் விற்பனையானது சில்லறை விற்பனையை அடிப்படையாகக் கொண்டது. மொத்த விற்பனைக்கு பொருந்தாது.

தேங்காயை கொள்வனவு செய்ய முடியாதவர்கள் இரு தேங்காய்களின் பெறுமதியான 150 ரூபாவுக்கு ஏற்றுமதித் தரமான தேங்காய்ப் பாலை கொள்வனவு செய்ய முடியும்.

சந்தையில் தேங்காய் விலை குறைந்தால் விலையைக் குறைப்போம் எனவும் அமைச்சர் குணவர்தன தெரிவித் தார்.

கொழும்பு மாவட்டத்தை முதன்மைப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்கள் தொடரும் போது விலை மாற்றத்தின் பலனை பொது மக்களுக்கு வழங்க முடியும் என நம்புவதாக அமைச்சர் பத்திரன தெரிவித்தார்.

மேலும், தேங்காய் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதியின் ஊடாக இந்தாண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப் படுகிறது.

உலக சந்தையில் இலங்கை தேங்காய்க்கு கிராக்கி நிலவுவதாகவும், இதன் விளைவாக கடந்தாண்டு தேங்காய் ஏற்றுமதியின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் அதிக இலாபம் ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்தாண்டு கணிப்பின்படி, தென்னை கைத்தொழில் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பத்திரன இதன் போது தெரிவித்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி  hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்