இலங்கை துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் உயர்வு

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பாலானோர் தற்போது, தங்களது போக்குவரத்துக்காக, துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலையில், துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 40,000 ரூபாவை அண்மித்துள்ளதுடன், அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தற்போதேனும் துவிச்சக்கர வண்டி செலுத்துவதை ஊக்குவிக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என மவுண்டன் துவிச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் துவிச்சக்கர வண்டியின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக, வீடுகளில் இருந்த பழைய துவிச்சக்கர வண்டிகளை புதுப்பித்து பயன்படுத்தவும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், சந்தையில், துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக துவிச்சக்கர வண்டியின் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரிஸ்மி இஸ்மத் தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், துவிச்சக்கர வண்டி இறக்குமதியின்போது அறவிடப்படும் வரியை, எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள நிவாரண பாதீட்டில் நீக்குமாறு சர்வதேச துவிச்சக்கர வண்டி ஓட்ட சம்மேளனத்தின் நடுவரான என்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்