திருகோணமலை துறைமுகதின் ஊடாக சரக்கு கப்பல்களை இலகுவாக கையாள முடியும்

திருகோணமலை இயற்கை துறைமுகதின் ஊடாக சரக்கு கப்பல்களை இலகுவாக கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கப்பல்களை பராமரித்தல் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகம், சர்வதேச ரீதியாக நீண்ட இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கப்பல் துறையை சேர்ந்தவர்கள் தமக்கான சேவைகளை அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் இந்த துறைமுகத்தின் ஊடாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைக்கப்பட வேண்டிய கப்பல்கள், முன்னர்போல வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போதைய நிலையில் மிக துரிதகதியில் கப்பல்களை சீரமைப்பதற்கான வசதிகள் உள்ளதாக வர்த்தக தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை துறைமுகம், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு சேவை வழங்கக்கூடிய இடத்தில் உள்ளதனால், சர்வதேச பிரபல கப்பல் சீரமைப்பு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் உள்ளன.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிற்கு பின்னரான காலப்பகுதியினில், திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக அதிக அளவிலான அந்நிய செலாவணியினை இலங்கை துறைமுக அதிகார சபை பெறக்கூடிய தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்